/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரி கொலை வழக்கில் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு
/
வியாபாரி கொலை வழக்கில் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜன 22, 2025 12:38 AM
கோவை; கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாரூக்,31; திராவிடர் விடுதலை கழக உறுப்பினரான இவர், 2017, மார்ச் 16ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அக்ரம் ஜிந்தா,32, சதாம் உசேன், 35, சம்சுதின்,38, உக்கடம் அன்சாத்,37, ஜாபர் அலி,36, அப்துல்முனாப்,38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சாட்சி விசாரணை, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. சாட்சியளிக்க வந்த நேருதாஸ் என்பவருக்கு, ஆறு பேரும் கோர்ட் வளாகத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமின், கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. போலீசார் 6 பேரையும் தேடி வந்த நிலையில், கோர்ட்டில் சரணடைந்தனர்.
சாட்சி விசாரணை மீண்டும் துவங்கியது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சாட்சிகள் அழைத்து வரப்படாததால், வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.