/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிருடன் இருப்பவரின் பெயர் ரேஷன் கார்டில் நீக்கம்; பெண் புகார்
/
உயிருடன் இருப்பவரின் பெயர் ரேஷன் கார்டில் நீக்கம்; பெண் புகார்
உயிருடன் இருப்பவரின் பெயர் ரேஷன் கார்டில் நீக்கம்; பெண் புகார்
உயிருடன் இருப்பவரின் பெயர் ரேஷன் கார்டில் நீக்கம்; பெண் புகார்
ADDED : ஆக 04, 2025 07:37 PM
வால்பாறை; உயிருடன் இருப்பவரின் பெயர் ரேஷன் கார்டில் இறந்து விட்டதாக கூறி நீக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்ததால், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு சார்பில், தற்போது பல்வேறு பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்து வருகிறது. அவ்வகையில், வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
முகாமில் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தனித்தனி முகாம்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி என்ற பெண் தன் கைக்குழந்தையுடன் முகாமிற்கு வந்தார்.
அவர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ''குழந்தையின் பெயரை சேர்க்க தாலுகா அலுவலகம் சென்ற போது, ரேஷன் கார்டில் தான் இறந்து விட்டதாக கூறி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இது குறித்து மனு அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது பெயரை மீண்டும் ரேஷன்கார்டில் சேர்க்க வேண்டும்' என்றார்.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ள மனுதாரர் தற்போது வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அவரது பெயரை நாங்கள் நீக்கவில்லை. யார் நீக்கியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்திய பின், மீண்டும் அவரது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.