/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
/
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
ADDED : அக் 13, 2024 06:01 AM
தொண்டாமுத்துார்: வேடபட்டி, தேவேந்திர வீதியை சேர்ந்தவர் லோகராஜ், 36; கூலி தொழிலாளி. திருமணமாகி, சத்யபாமா, 36 என்ற மனைவி, ஒரு மகன் உள்ளனர். கடந்த, 8ம் தேதி இரவு, லோகராஜ், மனைவி சத்யபாமாவுடன், பேரூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வேடபட்டி, சிங்காநல்லுார் மாரியம்மன் கோவில் அருகே செல்லும்போது, எதிரே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அதிவேகத்தில் வந்து, லோகராஜ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது.
கணவன்-, மனைவி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சத்யபாமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொண்டாமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.