/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமாயண காலத்திலும் பெண்கள் சிறந்து விளங்கினர்; சொற்பொழிவில் தகவல்
/
ராமாயண காலத்திலும் பெண்கள் சிறந்து விளங்கினர்; சொற்பொழிவில் தகவல்
ராமாயண காலத்திலும் பெண்கள் சிறந்து விளங்கினர்; சொற்பொழிவில் தகவல்
ராமாயண காலத்திலும் பெண்கள் சிறந்து விளங்கினர்; சொற்பொழிவில் தகவல்
ADDED : ஏப் 07, 2025 09:54 PM

பெ.நா.பாளையம்; ராமாயண காலத்திலும், பெண்கள் பெருமைமிகு செயல்களை செய்திருக்கிறார்கள் என, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ் துறை உதவி பேராசிரியர் குரு ஞானாம்பிகா பேசினார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில், ராம நவமியையொட்டி, தொடர் சொற்பொழிவு நடந்தது. இதில், 'ராமாயணத்தில் பெருமைமிகு பெண்கள்' என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சிக்கு, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார்.
இதில், தமிழ் துறை உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா, பேசுகையில்,''ராமாயண காலத்திலும், பெண்கள் பெருமைமிகு செயல்களை செய்துள்ளனர். அக்காலத்திலும் பெண்கள் வீரம், கொடை, கல்வி, செல்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி உள்ளனர். தங்களை நாடிவரும் வறியவர்களுக்கு கொடைகள் அளித்து பெருமைப்படுத்தினர். அனைத்து பகுதிகளிலும், துறைகளிலும், பெண்கள் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, அவர்களுடைய பண்பு, நலன்கள் போற்றப்பட்டன. சுவாமி விவேகானந்தர், இந்திய பெண்கள், சீதையைப் போல வாழ வேண்டும் என, குறிப்பிட்டு இருக்கிறார். ராமாயண காலத்தில், தெய்வங்கள் அவதாரங்களாக வடிவெடுத்து வாழ்ந்திருக்கிறார்கள். தற்போதைய கலியுகத்தில் தெய்வங்கள், மகான்களாக வாழ்கிறார்கள். பகவான் ராமகிருஷ்ணரும், அன்னை சாரதா தேவியும், சுவாமி விவேகானந்தரும் அத்தகைய மகான்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

