/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்
/
மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்
மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்
மத்திய அரசு சுய உதவிக்குழு உதயம் தெற்கு தொகுதி மகளிர் சேர ஆர்வம்
ADDED : டிச 23, 2024 04:19 AM
கோவை : கோவை மக்கள் சேவை மையம் சார்பில், ராம்நகர் விஜய் பார்க் இன் ஓட்டலில், மத்திய அரசு பங்களிப்போடு, துவங்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழு பயிற்சி முகாம், கோவை தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:
கோவையில் செயல்பட்டு வரும் மக்கள் சேவை மையம், மகளிரை முன்னிறுத்தி ஏராளமான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
அதன் ஒரு மைல்கல் தான், தற்போது துவங்கப்பட்டுள்ள மத்திய அரசு சுயஉதவிக்குழு. கோவை தெற்கு தொகுதியில் மட்டும், 30 சுயஉதவிக்குழுக்கள் துவங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் 12 முதல் 15 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இவர்களுக்கு, மத்தியஅரசின் மனிதவளமேம்பாட்டுத்துறை சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் உதவியும் வழங்கப்படுகிறது. இக்குழுக்களை, கோவை தெற்கு தொகுதியில் மட்டுமல்லாமல், கோவை முழுவதும் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை மகளிர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, வானதி சீனிவாசன்பேசினார். திரளான சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்றனர்.