ADDED : மார் 07, 2026 06:41 AM

கோவை: சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் மகளிர் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில், 'விருக்சா 2026' என்ற பெயரில், மகளிர் தினவிழாக் கொண்டாட்டம் நடந்தது.
சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை இணைச்செயலர் நித்யாதலைமை தாங்கி, மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தையும், அறிவு, வாய்ப்புகள் மற்றும் தலைமைத்துவம் மூலம் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கையும் விளக்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் ரங்கநாயகி தாங்கள் கற்ற கல்வியை, சுய, குடும்ப முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
சாதனைப் பெண்கள் குறித்து மாணவியர் தயாரித்தவீடியோ ஒளிபரப்பப்பட்டது.சுவரொட்டி தயாரித்தல், புகையில்லா சமையல், பேஷன் அணிவகுப்பு, செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் ராதிகா, மகளிர் மேம்பாட்டுச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இந்துமதி, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

