/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுர காளியம்மன் கோவில் வேள்விச்சாலை பணி துவக்கம்
/
மதுர காளியம்மன் கோவில் வேள்விச்சாலை பணி துவக்கம்
ADDED : ஜூலை 09, 2025 10:18 PM

அன்னுார்; எல்.கோவில்பாளையம் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வேள்விச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.
அன்னுார் அருகே லக்கேபாளையம், கோவில்பாளையத்தில், பல நூறு ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் முழுவதும், கருங்கற்களால், பல கோடி ரூபாய் செலவில் கோபுரம், மகா மண்டபம், வசந்த மண்டபம், விமானம் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 1ம் தேதி துவங்க உள்ளது. நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மடாதிபதிகள் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து கும்பாபிஷேக விழாவுக்கு வேள்விச்சாலை அமைப்பதற்கு முகூர்த்தக்கால் நடும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது. மதுர காளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.---