/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜல்லிக்கட்டுக்காக காலரி அமைக்கும் பணி தீவிரம்
/
ஜல்லிக்கட்டுக்காக காலரி அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 17, 2025 11:44 PM

போத்தனூர்; கோவை, ஜல்லிக்கட்டு விழாவுக்காக காலரி அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுக்கரை - நீலம்பூர் எல் ஆண்டு டி பை - பாஸ் சாலையில், கஞ்சிக்கோனாம்பாளையம் பிரிவு அடுத்து, கோவை மாவட்ட நிர்வாகம், கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை இணைந்து வரும், 27ல் ஜல்லிக்கட்டு திருவிழாவை நடத்துகிறது.
தற்போது காலரி, வாடி வாசல், களம், காளைகள் வரும், வெளியேறும் வழிகள் அமைக்கும் பணி நடக்கிறது.
இப்பணியை நேற்று மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
முன்னதாக வருவாய், போலீஸ், தீயணைப்பு, மாநகராட்சி, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கலெக்டர் பேசுகையில், மாடு பிடி வீரர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் மட்டுமே களமிறங்க அனுமதிக்கவேண்டும். கொம்புகளில் ரப்பர் புஷ் மாட்டியிருக்கவேண்டும்.
மாநகராட்சி குடிநீர், மொபைல் டாய்லெட், தூய்மை பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேவையான மொபைல் டாய்லெட்களை திருப்பூர், சேலத்திலிருந்து வரவழைத்துக்கொள்ளலாம்.
தீயணைப்பு துறையினர் விழா நடக்குமிடத்திலிருந்து ஐந்து கி.மீ. சுற்றளவு வரை திறந்தவெளி தரைமட்ட கிணறுகள் உள்ளதா என கண்டறிந்து அவ்விடத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், உதவி போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, மதுக்கரை தாலுகா தாசில்தார், கோவை தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

