/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது குடிக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை
/
மது குடிக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை
ADDED : ஜன 29, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே, மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணத்துக்கடவு அருகே, சிங்கையன்புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார்,31. இவர், தினமும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து செலவு செய்து வந்தார்.
இவர், வேலைக்கு செல்லாத நிலையில், மது குடிக்க வீட்டில் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், மனம் உடைந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து அங்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார், பிரேதத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.