/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
/
மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
ADDED : மார் 31, 2025 11:24 PM
தொண்டாமுத்தூர்; கரடிமடையில், மரத்தில் இருந்து தவறி விழுந்த, கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
முகாசிமங்கலம், தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் காமராஜ்,40; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், காமராஜ் நேற்று காலை, கரடிமடையில் உள்ள ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்திற்கு, மரம் வெட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.
மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரடிமடையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், காமராஜ் வரும் வழியிலேயே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

