/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்
/
காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்
ADDED : ஜன 03, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை அருகே, வீடுகளை சேதப்படுத்திய யானைகளை தொழிலாளர்கள் நள்ளிரவில் விரட்டினர்.
வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன். இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள், நேற்று முன்தினம் நள்ளிரவு நுழைந்த யானைகள், அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொண்டன.
அதன்பின், வடமாநில தொழிலாளியான சந்துார் என்பவரின் வீட்டின் பின்பக்கத்தை இடித்தன. சப்தம் கேட்டு எழுந்த அவர்கள் அலறியடித்துக்கொண்டு, முன்பக்க வழியாக வெளியேறி அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்தனர்.
தகவல் அறிந்த எஸ்டேட் தொழிலாளர்கள் திரண்டு சென்று, ஒரு மணி நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர்.