/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை
/
நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை
நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை
நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர் கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2025 09:15 PM
வால்பாறை; கருமலை எஸ்டேட் பகுதியில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், கருமலை பஜார் பகுதியில் நகர்ப்புற துணை நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இங்கு வசிக்கும் கர்ப்பிணிகள், தொழிலாளர்கள் சிகிச்சை பெற வால்பாறை நகருக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே, எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, கருமலை பஜாரில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்' என்றனர்.