/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்
/
கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்
ADDED : மார் 09, 2024 07:38 AM

உடுமலை : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு, உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, இரு மாதமாக ஊதியம் வழங்கப்படாமல், இழுபறியாகி வருகிறது.
எனவே, உடனடியாக நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், உடுமலை குட்டைத்திடல் காந்தி சிலை முன், மகளிர் தினத்தன்று, கருப்புக்குடை பிடித்து, கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். கமிட்டி உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, வனிதா, வஞ்சிமுத்து, செந்தில்குமார், விவசாய சங்க செயலாளர் பாலதண்டபாணி, தலைவர் ராஜகோபால், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு., செயலாளர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது.

