/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக போலியோ தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக போலியோ தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 26, 2025 08:40 PM
பொள்ளாச்சி: உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த, ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக, அக்., 24ல், உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. போலியோ தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
'ஒரு நாள், ஒரு நோக்கம், போலியோ ஒழிப்பு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 'போலியோவை முடிவுக்கு கொண்டு வருவோம்' என பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கையெழுத்து பிரசாரம் மேற்கொண்டனர்.
மேலும், பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவில், போலியோ தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பட்டன. அரசு மருத்துவமனை டாக்டர் அருள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

