/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக மண் தினம் மரக்கன்று நடும் விழா
/
உலக மண் தினம் மரக்கன்று நடும் விழா
ADDED : டிச 09, 2024 05:31 AM

பெ.நா.பாளையம் : உலக மண் தினத்தை ஒட்டி, 'காவேரி கூக்குரல்' இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
உலக மண் தினத்தில் காவிரி கூக்குரல் இயக்கம் வாயிலாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 95 ஆயிரம் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் மண் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில், ஈஷா சார்பில், 4,000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக வெள்ளமடை ஊராட்சி தலைவர் பிரபாகரன் பங்கேற்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள, 50 ஈஷா நர்சரிகள் வாயிலாக மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மூன்று ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது தேவையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஈஷா நர்சரிகளில் விநியோகத்துக்கு தயாராக உள்ளன என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.