/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏரிப்பட்டி பள்ளியில் நுால் பரிசளிப்பு விழா
/
ஏரிப்பட்டி பள்ளியில் நுால் பரிசளிப்பு விழா
ADDED : ஆக 05, 2025 11:40 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி பள்ளியில், நுால் பரிசளிப்பு விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தேசிய வருவாய்வழி திறனாய்வு மற்றும் படிப்பு உதவி தேர்வு நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி வரவேற்றார். பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
சேவாலயம் அறக்கட்டளை உறுப்பினர் ராஜேந்திரன்,தேசிய வருவாய்வழி திறனாய்வு மற்றும் படிப்பு உதவி தேர்வு நுாலை மாணவர்களுக்கு வழங்கினார். மொத்தம், 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மாநில அரசு, 48 ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த நுால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தமிழக அரசு வெளியிட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் மனத்திறன், படிப்பறிவுத்திறன் தேர்வுக்கான நுால்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது,' என்றனர்.
ஆசிரியர் கீதா, விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். சேவாலயம் அறக்கட்டளை உறுப்பினர் அப்துல் ஹமீது பேசினார். ஆசிரியர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.