தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஒர்க் அவுட்' ஆகாத 'மஞ்சள்' சென்டிமென்ட்

 'ஒர்க் அவுட்' ஆகாத 'மஞ்சள்' சென்டிமென்ட்

 'ஒர்க் அவுட்' ஆகாத 'மஞ்சள்' சென்டிமென்ட்


ADDED : மே 06, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை தெற்கில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, வேட்பு மனு தாக்கல் செய்தபோது, கையில் எலுமிச்சை பழம் வைத்திருந்தார்.

அதேபோல், தேர்தல் பரப்புரைக்கு வீதி வீதியாக நடந்து சென்றபோதும் தவறாமல் எலுமிச்சை வைத்திருந்தார். ஓட்டுச்சாவடியில் அமர்ந்திருந்த பூத் ஏஜன்ட்டுகள் அனைவரும் மஞ்சள் நிற துண்டு அணிந்திருந்தனர்.

மற்றவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததும் மஞ்சள் துண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு தி.மு.க. ஏஜன்ட்டுகள் பலரும் மஞ்சள் துண்டு அணிந்து வந்தனர். நுழைவாயில் போலீசார் தடுத்து, துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இருந்தாலும் காரில் சென்றவர்கள் பலரும் அணிந்திருந்தனர். அதை போலீசார் கவனிக்கத் தவறி விட்டனர். போலீசார் பறிமுதல் செய்வார்கள் என நினைத்த சிலர், துண்டுக்குப் பதிலாக மஞ்சள் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

10 தொகுதிகளில் பணியாற்றிய தி.மு.க. ஏஜன்ட்டுகள் மற்றும் தெற்கில் போட்டியிட்ட தி.மு.க. ஆதரவு சுயே. வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்பில் வந்த ஏஜன்ட்டுகள் அனைவருக்கும் வழங்கப்பட்ட அடையாள அட்டை டேக் மஞ்சள் நிறத்தில் இருந்தது.

ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டு விபரங்களை எழுதுவதற்கு அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டு இருந்தது. அதை சேகரித்து சுற்று வாரியாக பதிவு செய்ய இன்னொரு புத்தகம் வழங்கப்பட்டு இருந்தது.

அனைத்து புத்தகத்தின் அட்டையும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்டிமென்ட்டாக மஞ்சள் துண்டு அணிந்திருந்தார். அதேபோல், செந்தில்பாலாஜியும் மஞ்சள் சென்டிமென்ட் பார்ப்பதாக, தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

என்ன செய்வது...மஞ்சள் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகவில்லையே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us