/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் 'ஆக்ரோஷம்'
/
ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் 'ஆக்ரோஷம்'
ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் 'ஆக்ரோஷம்'
ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் 'ஆக்ரோஷம்'
ADDED : ஜூன் 27, 2025 11:32 PM

கோவை; நேரு ஸ்டேடியத்தின் எதிரே நடந்து வரும், ஒய்.எம்.சி.ஏ., டிராபி போட்டியில் வீரர், வீராங்கனைகள் ஆக்ரோஷமான ஆட்டத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில், 69வது ஒய்.எம்.சி.ஏ., வெங்கடகிருஷ்ணன் டிராபி போட்டி நடந்து வருகிறது. ஜூலை, 6ம் தேதி நிறைவடைகிறது.
மாவட்ட அளவிலான இப்போட்டியில், மினி பாய்ஸ், மினி கேர்ள்ஸ், ஜூனியர் பாய்ஸ், மென் ஆகிய பிரிவுகளில், 59 அணிகள் பங்கேற்றுள்ளன.
இரண்டாம் நாள் மாலையில், வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் ரசிகர்களிடம் கரகோஷத்தை எழுப்பியது. மினி பாய்ஸ் பிரிவில், சர்வஜனா அணியும், பேசன் பொள்ளாச்சி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், சர்வஜனா அணி, 39-28 என்ற புள்ளிகளில் பேசன் பொள்ளாச்சி அணியை வென்றது.
தொடர்ந்து, டெக்சிட்டி அணி, 51- 17 என்ற புள்ளிகளில் லிஸ்யூ அணியையும், பீப்பல் அணி, 44-2 என்ற புள்ளிகளில் எஸ்.வி.ஜி.வி., -பி அணியையும், எஸ்.வி.ஜி.வி.,-ஏ அணி, 100-5 என்ற புள்ளிகளில் சுகுணா பிப் அணியையும், பாரதி அணி, 57-20 என்ற புள்ளிகளில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.