/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யோகா, தியானம் செய்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்'
/
'யோகா, தியானம் செய்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்'
ADDED : டிச 28, 2024 12:15 AM

மேட்டுப்பாளையம்; நினைவு ஆற்றலை அதிகரிக்க, தினமும் காலையில் யோகா, தியானம் செய்ய வேண்டும், என, பண்ணாரி அம்மன் குரூப் சேர்மன் பாலசுப்பிரமணியம் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், நிறுவனர் தினவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். செயலர் கவிதாசன் முன்னிலை வகித்தார். பண்ணாரி அம்மன் குரூப் சேர்மன் பாலசுப்பிரமணியம், பல்வேறு போட்டிகளிலும், தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
பள்ளி மாணவர்கள் அனைவரும், தினமும் காலையில் யோகாவும், தியானமும் செய்ய வேண்டும். அப்போது தான் நினைவு ஆற்றல் அதிகரிக்கும். நமது நாட்டில் மட்டுமே முனிவர்கள் அதிகம் வாழ்ந்துள்ளனர். மாணவர்கள் படிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல், விளையாட்டு, பல்வேறு கலை மற்றும் விஞ்ஞானம் சம்பந்தமான போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
உலகில் இயற்கையில் மாற்றங்கள் அதிகம் நடந்து வருகின்றன. எனவே குறைந்து வரும் ஆக்ஸிஜனை அதிகரிக்க இயற்கையை நேசிக்க வேண்டும். இப்பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் காஷ்மீர் பகுதியில், ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றுகிறார். அதனால் மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து, இந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்வி ஆலோசகர் கணேசன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.

