/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்':100 சதவீத நிதியுதவியில் நீங்கள் விரும்பும் கார் வாங்கலாம்!
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்':100 சதவீத நிதியுதவியில் நீங்கள் விரும்பும் கார் வாங்கலாம்!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்':100 சதவீத நிதியுதவியில் நீங்கள் விரும்பும் கார் வாங்கலாம்!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்':100 சதவீத நிதியுதவியில் நீங்கள் விரும்பும் கார் வாங்கலாம்!
ADDED : ஆக 16, 2025 11:32 PM

'தினமலர்' - சத்யா இணைந்து வழங்கும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சியில், ஆட்டோ மொபைலுக்கு தனியே ஒரு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டால் புக்கிங்களுக்கு பிரத்யேக ஆபர்கள் வழங்கப்படுகின்றன. எக்சேஞ்சுகளுக்கு சிறப்புஆபர்கள் வழங்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் 100 சதவீதம் வரை நிதியுதவிக்கு ஏற்பாடு செய்கின்றன.
சி.ஏ.ஐ., மோட்டார்ஸ், மஹிந்தராவுக்கான பிரத்யேக டீலராக, பி.இ. 6, எக்ஸ்இவி 9 இ என இரு இ.வி. மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. எக்ஸ்யூவி 400 இ.வி. மாடலுக்கு ரூ.2.9 லட்சம் வரை ஆபர் உள்ளது. எக்ஸ்யூவி.யின் இதர மாடல்களுக்கும் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. டாப் எண்ட் மாடல்கள் ஒரு மாதத்துக்குள் டெலிவரி தரப்படும் என்கின்றனர்.
பிரசன்னா கியா ஸ்டாலில், செல்டாஸ், கேரன்ஸ் கிளாவிஸ், சோனெட், சிரோஸ் என மாடல்களுக்கு ஏற்ப ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆனைமலைஸ் ரெனால்ட்ஸ் ஸ்டாலில் 3 வேரியன்ட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு ரூ.1.20 லட்சம் வரை சலுகைகள் வழங்குகின்றனர். கைகர் கார்களுக்கு 1.35 லட்சம் வரையும், குறிப்பிட்ட மாடல்களுக்கு இன்சூரன்ஸ் இலவசம் உள்ளிட்ட சலுகைகள் வழங்குகின்றனர்.
சந்திரா ஹூண்டாய் சார்பில், வென்யூவுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கிரெட்டாவில் மூன்று வேரியன்ட்களுக்கும் ரூ.50 ஆயிரம் வரை, ஐ 20க்கு ரூ. 1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. எக்சேஞ்ச் ஆபரில் மார்க்கெட்டிலேயே பெஸ்ட் பிரைஸ் என்கின்றனர்.
ஜெய் கிருஷ்ணா மாருதியில், ஸ்விப்ட் ரகங்களுக்கு ரூ.1.04 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மகளிருக்கான ஸ்பெஷல் காராக கருதப்படும் செலரியோவுக்கு ரூ.95 ஆயிரம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. 7 சீட்டர் வாகனம் தேடுகிறீர்களா. எர்டிகோவில் 6 ஏர் பேக்குகளுடன் புதிய வாகனம் உங்களுக்காகவே அறிமுகம் ஆகிறது. அதுபற்றிய விவரங்களும் ஸ்டாலில் தெரிந்து கொள்ளலாம்.
சூர்யபாலா ஹோண்டாவில் பிக் விங் இரண்டு வேரியன்ட்கள், ஹைனஸ் 3 வேரியன்ட்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை சலுகைகள் தருகின்றனர். மேலும், எக்சேஞ்ச் ஆபரில், ஆக்ஸஸரீஸ்களுக்கு கூடுதல் சலுகையும் கிடைக்கிறது.
அப்புறமென்ன விசாரித்து பார்த்து, உங்களுக்கான பட்ஜெட்டில் ஒரு வாகனத்தை புக் செய்யுங்க!