sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தலில் சொன்னீங்களே... செய்தீங்களா?

/

தேர்தலில் சொன்னீங்களே... செய்தீங்களா?

தேர்தலில் சொன்னீங்களே... செய்தீங்களா?

தேர்தலில் சொன்னீங்களே... செய்தீங்களா?


ADDED : மார் 08, 2024 12:12 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், கொங்கு மண்டலம், விவசாயம், தொழில்துறை, மருத்துவம், கல்வி அனைத்திலும் முன்னணியில் உள்ளது. மாநில வருவாயில் கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொங்கு மண்டலத்தில் குறிப்பாக, கோவை, திருப்பூர், மாவட்ட விவசாயத்தில் முக்கிய தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.

l தென்னையில் கேரள வாடல் நோய், வெள்ளை ஈ, குறுத்து கட்டை நோய் பாதிப்புக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த நோய் தாக்கிய மரத்தை வெட்டி அகற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. இது, பெரும் சவாலாக உள்ளது.

l தென்னையை தாக்கும் நோய்களை கண்டறிந்து, கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் கொண்டு சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளது.

l நோய் தாக்கி வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்கு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாற்று பயிர் சாகுபடி அல்லது, மாற்று தென்னங்கன்று நடவு செய்ய அரசு உதவ வேண்டும் என்று விவசாயிகளின் வலியுறுத்துகின்றனர்.

l வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நோய் பாதிப்புகளை தடுத்து, தென்னை விவசாயத்தை பாதுகாக்க விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகள் இல்லை. தேங்காய், கொப்பரை விலை சரிவை தடுக்க, அரசிடம் நீண்ட கால திட்டமிடல் இல்லை.

l மத்திய அரசின் ஆதார விலையை உயர்த்தி, விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் அளவையும் அதிகரிக்க வேண்டும். கொள்முதல் செய்த கொப்பரையில் எண்ணெய் தயாரித்து, ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாகவும், சத்துணவு திட்டத்திலும் பயன்படுத்த வேண்டும். கொப்பரைக்கு பதிலாக தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இதெல்லாம், எம்.ஜி.ஆர்., காலத்து திட்டமாக இருந்தாலும், இது பற்றி சிந்திக்க தற்போதைய அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை.

l டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி இருக்கும் நிலையில், கள் இறக்கவும் அனுமதிக்க வேண்டும். நீரா உற்பத்தியை அதிகரிக்கவும், நீராவில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க தொழில்நுட்பங்களை அரசு தருவிக்க வேண்டும்.

l தேங்காயை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற, 50 சதவீத மானியத்தில் புதிய வரைவு திட்டம் வேண்டும். இக்கோரிக்கைகளை பல ஆண்டுகளாக விவசாயிகள் முன்வைத்தும், நிறைவேற்ற அரசு அக்கறை காட்டாததால், தென்னை சார்ந்த பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்கிறது.

l ஆனால், தேர்தலுக்கு தேர்தல் தென்னை விவசாயிகளை குளிர்விக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். தென்னையில் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என, 2009 தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும், என, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உறுதியளித்து பேசினார். ஆனால், கள் அனுமதிக்காக இன்று வரை போராடுகின்றனர்.

l 'நானும் விவசாயி தான்' என, போட்டோ ஷூட் நடத்திய முன்னாள் முதல்வர் பழனிசாமி, 'விவசாயிகளின் தோழன்' என வயலில் இறங்கி போஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், தென்னை விவசாயிகளுக்காக எதுவுமே செய்யவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

l விவசாயிகள் குரலுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், தென்னை விவசாயம் பாதிப்பது மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளுக்கும் நெருக்கடி ஏற்படும். இது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கின்றனர்.

l தென்னை பிரச்னைக்கு தீர்வு காண எந்த கட்சி உத்தரவாதம் கொடுக்கிறதோ, அந்த கட்சிக்கே எங்கள் ஆதரவு என்கின்றனர் விவசாயிகள். யார், என்ன வாக்குறுதி கொடுத்து, விவசாயிகளை காக்க களமிறங்க போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

தேர்தலுக்கு நடக்குது 'டிராமா'

தென்னையில், நோய் பாதிப்பு குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எவ்வித ஆய்வும் செய்யாமல், குத்துமதிப்பாக தகவல் செய்தனர். எத்தனை மரங்கள் பாதித்துள்ளன, வெட்டப்பட்ட மரங்கள் எண்ணிக்கை என்ன என்ற கள ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பது பகிரங்க குற்றச்சாட்டாக உள்ளது.அதன்பின், தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல்பாண்டியன் ஆய்வுக்கு பின், வேளாண், தோட்டக்கலைத்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு செய்வதாக கூறினர்.நோய் பாதிப்பு குறித்து சமீபத்தில் ஆய்வு செய்ய வந்த வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும், உயர்அதிகாரிகளும், தேர்வு செய்த விவசாயிகளை மட்டும் சந்தித்து பேசியது, எல்லாமே கண்துடைப்பு தான் என்பதை தெளிவுபடுத்தியது.அமைச்சர் பேட்டியளித்த போது, தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகமில்லை. ரேஷனில் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என, தெரிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு ஆண்டாக விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்திய போது யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது, லோக்சபா தேர்தலில் விவசாயிகளின் ஓட்டு வங்கிக்கு குறி வைத்து, வேளாண் பல்கலை, தோட்டக்கலை, வேளாண் துறை மற்றும் வேளாண் பல்கலை மாணவர்களை களமிறக்கி கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இதெல்லாமே கண்துடைப்பு என்பது தான் வேதனை!








      Dinamalar
      Follow us