/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது!'
/
'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது!'
UPDATED : பிப் 01, 2025 07:18 AM
ADDED : ஜன 31, 2025 11:44 PM

பொள்ளாச்சி; 'ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டமாட்டேன்; குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன்,' என, தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணியில் உறுதியேற்றனர்.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று, ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி, மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே துவங்கியது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கோகுலகிருஷ்ணன், பேரணியை துவக்கி வைத்தார். முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
விழாவையொட்டி, ெஹல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டேன், மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்ட மாட்டேன். குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன்; சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்ட மாட்டேன், என, உறுதியேற்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், 'சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், ெஹல்மெட் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,' என்றார்.