/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 'ரேபிஸ்' தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

ADDED : அக் 12, 2024 12:09 AM

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில், தெரு நாய்கள் வீதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி வடக்கு மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி எல்.ஜி.பி., நகரைச் சேர்ந்த, 23 வயது பெண், மூன்று மாதங்களுக்கு முன், அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்களுக்கு உணவளித்தார்.
அப்போது, சண்டையிட்டுக் கொண்டிருந்த தெரு நாய்களில் ஒன்று, அந்த இளம்பெண்ணை கடித்து விட்டது. அவர், 'ரேபிஸ்' நோய்க்கான ஊசி போடாமல் விட்டு விட்டார். இதனால் அவரை, 'ரேபிஸ்' நோய் தாக்கியது.
இதை, தாமதமாகவே உணர்ந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.