ADDED : மார் 16, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
கோவை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மோனிக்ராஜ் 22. கடந்த 11ம் தேதி தோட்டத்துக்கு நீர் பாய்ச்சும் போது மின்மோட்டரில் விபத்து ஏற்பட்டது. காயமடைந்த அவர் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் சகோதரி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டு கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. மோனிக்ராஜ் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
