தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எப்போதும் ப்ரெஷ் ஆக இருக்கணும் உங்க டூத் பிரஷ்

எப்போதும் ப்ரெஷ் ஆக இருக்கணும் உங்க டூத் பிரஷ்

எப்போதும் ப்ரெஷ் ஆக இருக்கணும் உங்க டூத் பிரஷ்


UPDATED : நவ 21, 2026 01:34 PM

ADDED : நவ 21, 2026 01:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 01:34 PM ADDED : நவ 21, 2026 01:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பல் துலக்கும் பிரஷை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, ஈரப்பதமான இடங்களில் பிரஷை வைப்பதால் நுண்ணுயிரிகள் வளர்வதற்கான சூழல் ஏற்படலாம். இதனால் பல் துலக்கும் பிரஷை முறையாகச் சுத்தம் செய்து பராமரிப்பது அவசியம்.

ஒவ்வொரு முறை பல் துலக்கும் முன்பும், பின்பும் பிரஷை ஓடும் குழாய் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பற்பசை எச்சங்கள், உணவுத் துகள்களை அகற்ற வேண்டும். பின்னர் பிரஷில் உள்ள தண்ணீரை உதறிவிட்டு, காற்றோட்டமான இடத்தில் செங்குத்தாக வைத்து உலர விட வேண்டும்.

ஈரமான பிரஷை மூடியில்லாமல் வைப்பதையும், மற்றவர்களின் பிரஷ்களுடன் முட்கள் ஒன்றோடொன்று உரசும் வகையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். பிரஷை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்த கூடாது. 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது முட்கள் சிதைந்தவுடன் மாற்ற வேண்டும் என்கிறார் பல் டாக்டர் காயத்ரி.

அவர் கூறியதாவது:

பல் துலக்கும் பிரஷ்களில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. யு.வி–சி கதிர்கள் வாயிலாக இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

இதற்காகப் பயன்படுத்தப்படும் சாதனத்தில் பிரஷை வைத்து, கிருமி நீக்கம் செய்யலாம். ரசாயனப் பொருட்கள் தேவையில்லை. ஆனால், யு.வி. கதிர்கள் பிரஷின் அனைத்து முட்களுக்கும் சென்றடையும் என்று உறுதியாகக் கூற முடியாது.

பிரஷில் படிந்துள்ள உணவுத் துகள்கள், பற்பசை எச்சங்களை யு.வி. தொழில்நுட்பம் அகற்றாது. பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவினாலும், பல் மற்றும் ஈறு நோய்களைத் தடுக்கும் என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

எனவே, தினமும் பிரஷை தண்ணீரில் நன்றாக கழுவி உலர வைப்பது அடிப்படை சுகாதார முறையாகும். யு.வி. கிருமி நீக்கச் சாதனங்களை கூடுதல் பாதுகாப்பு முறையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முக்கியமாக, நம்முடைய பிரஷை கழிப்பறையில் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும். டாய்லெட்டை பிளஷ் பண்ணும்போது எழும் கிருமிகள், பிரஷ்ஷில் தங்கி மறுநாள் பல் விளக்கும்போது வாயினுள் நுழைந்து விடும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பிரஷை சுத்தம் செய்ய


புது தொழில்நுட்பம்
பல் துலக்கும் பிரஷைச் சுத்தப்படுத்த யு.வி–சி கதிர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதில் 100 முதல் 280 நானோமீட்டர் அலை நீளம் கொண்ட யு.வி–சி கதிர்கள், நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ–வை சேதப்படுத்தி, அவற்றின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us