/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
/
சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
ADDED : ஆக 31, 2025 08:29 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே மது போதையில் சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே கூடுதுறை மலையை சேர்ந்தவர் சங்கர், 50. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்திரம்மாள், 40. பத்திரம்மாளுக்கு ரங்கம்மாள், செல்வி என இரு சகோதரிகள் உள்ளனர். இவர்களது வீடு கூடுதுறை மலையில் உள்ளது. ரங்கம்மாளின் மகன் விக்னேஷ், 30, கூலி தொழிலாளி.
விக்னேஷ் குடியிருந்த வீட்டை விற்க வேண்டி, சித்தப்பா சங்கர், விக்னேஷிடம் வீட்டை காலி செய்து தருமாறு கூறியுள்ளார். வீட்டை காலி செய்ய மறுத்த விக்னேஷ்,நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வந்து சங்கரிடம் தகராறு செய்தார். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே விக்னேஷ் அங்கிருந்து கிளம்பினார். பின் சுக்கு காபி கடை அருகே சென்ற விக்னேஷ், அங்கு நின்றுக்கொண்டிருக்கையில், சித்தப்பா சங்கர் அங்கு வந்து விக்னேஷை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சாலையில் கிடந்த கல்லை எடுத்து சங்கரின் தலையில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, விக்னேஷை கைது செய்தனர்.----