ADDED : ஜன 29, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூரில் பெண்ணின் கைப்பையை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி புவனேஸ்வரி,47. கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றார்.
கணவரிடம் கைப்பையை கொடுத்துவிட்டு பாத்ரூம் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கணவன் கையில் இருந்த கைப்பையை நபர் ஒருவர் திருடி செல்வது தெரிந்தது. கைப்பையுடன் ஓடிய நபரை ஆட்டோ டிரைவர் பிடித்தார்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் துடியலூர் போலீசில் அந்நபர் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் துடியலூர் அருகே உள்ள வள்ளலார் நகர் நவீன், 27, என, தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

