/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் பேட்டால் அடித்து வாலிபர் கொலை; சம்பள பணம் கேட்டதால் ஆத்திரம்
/
கிரிக்கெட் பேட்டால் அடித்து வாலிபர் கொலை; சம்பள பணம் கேட்டதால் ஆத்திரம்
கிரிக்கெட் பேட்டால் அடித்து வாலிபர் கொலை; சம்பள பணம் கேட்டதால் ஆத்திரம்
கிரிக்கெட் பேட்டால் அடித்து வாலிபர் கொலை; சம்பள பணம் கேட்டதால் ஆத்திரம்
ADDED : ஆக 11, 2025 11:06 PM

பொள்ளாச்சி; சம்பள பணத்தை கேட்ட போது ஏற்பட்ட தகராறில், கிரிக்கெட் மட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டது குறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரதீப்,18, அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, 20, அர்ஜூன்,28 ஆகியோர், சமத்துார் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் பகுதி நேர டிரைவராக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், டிரைவருக்கான சம்பள பணத்தில் ஒரு பகுதியை மாரிமுத்து கொடுக்காமல் நிறுத்தி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதீப் உள்ளிட்ட மூன்று பேரும், மாரிமுத்துவிடம் சம்பள பணத்தில், 2,000 ரூபாய் கேட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த மாரிமுத்து, முழு சம்பளமும் கொடுக்க முடியாது என கூறினார். அவருடைய மகன் நடராஜனும், 25, அவர்களை தகாத வார்த்தையால் திட்டினர். அதில், மாரிமுத்து, நடராஜன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். இதில், பிரதீப், கார்த்தி, அர்ஜூன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து, நடராஜனை கைது செய்தனர்.
இந்நிலையில், பிரதீப் பெற்றோர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், 'எங்களது மூத்த மகன் பிரதீப்குமார், சம்பள பாக்கியை கேட்டபோது அவரை சரமாரியாக தாக்கியதில் இறந்தார்.மாற்றுத்திறனாளிகளான எங்களையும், குடும்பத்தையும் பிரதீப் கவனித்து வந்தார். இளைய மகன் அச்சுதன் மாற்றுத்திறனாளியாக உள்ளார்.
எனவே, பிரதீப்பை கொலை செய்த மாரிமுத்து, அவரது மகன் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களிடம் இருந்து உயிர் இழப்பு தொகை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.