/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபனுக்கு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபனுக்கு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபனுக்கு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபனுக்கு சிறை
ADDED : மே 01, 2025 11:55 PM
கோவை; ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி; கோவையில் தனது அண்ணனுடன் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார். கே.என்.ஜி., புதுார், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வசந்த், 22, சிறுமி வெளியே சென்று வரும் போதெல்லாம் நோட்டமிட்டு வந்திருக்கிறார். நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி சத்தம் போட்டதால், அங்கிருந்து தப்பினார்.
சம்பவம் குறித்து சிறுமி, அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வசந்த் மீது ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கு துடியலுார் அனைத்து மகளிர் போலீசில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவனை சிறையில் அடைத்தனர்.