/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர் கொலை விவகாரம்; பெண் உட்பட 3 பேர் கைது
/
இளைஞர் கொலை விவகாரம்; பெண் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 10:00 AM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு இளம் பெண் உட்பட 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே, ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார், 23; பால் வியாபாரி. திருமணம் ஆகாதவர். பெற்றோர், தங்கையுடன் வசித்து வருகிறார். தங்கைக்கு திருமணம் ஆகி அண்மையில் குழந்தை பிறந்தது. இதனால் தங்கை அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இதனிடையே, இடப்பற்றாக்குறை காரணமாக, சஞ்சய் குமார் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு கடந்த 7ம் தேதி இரவு உறங்கச்சென்றார்.
மறுநாள் அதிகாலை, அவரது அம்மா சஞ்சய் குமாரை எழுப்ப சென்ற போது, சஞ்சய் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து வந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.,அதியமான் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இக்கொலையை செய்தது கோவையை சேர்ந்த கமலக்கண்ணன், 20, ஆட்டோ டிரைவர், நாகராஜ், 19, கூலித்தொழிலாளி, காரமடையை சேர்ந்த கீர்த்தனா, 22, தனியார் பள்ளி ஆசிரியர் என தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கீர்த்தனா குறித்து சஞ்சய் குமார், ஊரில் தவறாக பேசி வந்துள்ளார்.
கோபமடைந்த கீர்த்தனா, தனது காதலனும் மாமா பையனுமான கமலக்கண்ணனிடம் நடந்ததை கூறியுள்ளார்.
கமலக்கண்ணன் தனது நண்பர் நாகராஜை அழைத்து வந்து, சஞ்சய் குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். ஆட்கள் வருகிறார்களா என கீர்த்தனா உளவு வேலை பார்த்துள்ளார்' என்றனர்.