/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து
/
முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஜன 16, 2025 04:18 AM
கோவை : கோவை, வேலாண்டிப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 25. இவருக்கும் கவுண்டம்பாளையம், சபரி கார்டனை சேர்ந்த பவுன்ராஜூக்கும், 26 முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், பவுன்ராஜ் மற்றும் அவரது நண்பர் சாய்பாபாகாலனியை சேர்ந்த அஜித்குமார், 23 ஆகியோர் வேலாண்டிபாளையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கார்த்திகேயன் அவ்வழியாக வந்தார்.
கார்த்திகேயனை, தடுத்து நிறுத்தி பவுன்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, பவுன்ராஜ் மற்றும் அஜித்குமார் சேர்ந்து கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினர். பவுன்ராஜ் வைத்திருந்த கத்தியை எடுத்து, கார்த்திகேயனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
அக்கம் பக்கத்தினர் கார்த்திகேயனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கார்த்தி கேயன் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் பவுன்ராஜ், அஜித்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

