நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் அன்புராஜ்,22. குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இது குறித்து நேற்று முன்தினம் இரவு அவரிடம் பெற்றோர் கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, குடிபோதையில் இருந்த அன்புராஜ் வீட்டின் கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

