/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான போட்டி; யுவா பள்ளி நான்காம் இடம்
/
மாவட்ட அளவிலான போட்டி; யுவா பள்ளி நான்காம் இடம்
ADDED : ஆக 31, 2025 08:26 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர், மாவட்ட அளவிலான பெண்கள் கால்பந்து போட்டிகளில் நான்காம் இடம் பெற்றனர்.
கோவை மாவட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான சகோதயா நடத்திய, 14 மற்றும், 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கால்பந்து போட்டியில், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் இரண்டு பிரிவிலும், நான்காம் இடம் பெற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். இவர்களுக்கு பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா, முதல்வர், துணை முதல்வர் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.