/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல அளவிலான விளையாட்டு போட்டி
/
மண்டல அளவிலான விளையாட்டு போட்டி
ADDED : ஜூலை 23, 2025 09:03 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் அசத்தினர்.
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடைபெற்றன.
கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் ரகுநாதன், கல்வி இயக்குனர் சரவணபாபு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
பூப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில், கிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணியும், என்.ஜி.என்.ஜி., அணியும் மோதின. அதில், 2 - 1 என்ற 'செட்' கணக்கில் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணி வெற்றி பெற்றது.
கால்பந்து போட்டி ஆண்கள் பிரிவில், விஸ்வதீப்தி பள்ளி அணியும், பி.கே.டி., பள்ளி அணியும் மோதின. அதில், 2 - 1 என்ற புள்ளி கணக்கில் விஸ்வதீப்தி பள்ளி அணி வென்றது. இறகு பந்து போட்டி ஆண்கள் பிரிவில், பி.கே.டி., பள்ளியும், விஸ்வதீப்தி பள்ளி அணியும் மோதின. இதில், 2 - 0 என்ற 'செட்' கணக்கில் பி.கே.டி., பள்ளி அணி வென்றது.
பெண்கள் பிரிவில், ஏ.எம்.எஸ்., அணியும், ஹனி பஞ்ச் பள்ளி அணியும் மோதின. 2 - 0 என்ற 'செட்' கணக்கில், ஏ.எம்.எஸ்., அணி வெற்றி பெற்றது.
கூடைப்பந்து பெண்கள் பிரிவில் ஏ.எம்.எஸ்., அணியும், விஸ்வதீப்தி அணியும் மோதின. இதில், 24 - 21 என்ற புள்ளி கணக்கில் விஸ்வதீப்தி அணியும் வெற்றி பெற்றது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில், சாந்திநிகேதன் பள்ளி அணியும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், 2 - 1 என்ற செட் கணக்கில் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவு ஹனி பஞ்ச் பள்ளி அணியும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், 2 - 1 என்ற 'செட்' கணக்கில் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர், கல்லுாரி மேலாளர் மற்றும் மாணவர் நலன் டீன் முத்துக்குமரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார், விளையாட்டு வீரர்களுக்கு பல விளையாட்டு நுணுக்கங்களை எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.