sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதி

/

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதி

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதி

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதி


ADDED : ஜூலை 13, 2011 11:48 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: மேல்கவரப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு0 வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாக எல்லையில் உள்ள இந்த குடியிருப்பு பகுதியில் சாலை, தெருவிளக்கு, வடிகால் வசதி மற்றும் சடுகாட்டு வசதி எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், நகராட்சி அதிகாரிகள் இப்பகுதி மக்களிடம் குடிநீர், சொத்து வரி, தொழில் வரிகளை வசூலித்து வருகின்றனர்.இந்த குடியிருப்பு நகரை விட்டு 5 கி.மீதூரத்தில் உள்ளது. ஆனால் இப்பகுதியில் அரச டவுன் பஸ்கள் கூட நிறுத்துவதில்லை. இதனால் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து வரவேண்டியுள்ளது.



இப்பகுதிக்கென சடுகாடு ஏற்படுத்தாததால் இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் மேல்கவரப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதி கோரி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மேல்கவரப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us