sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்து : மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயம்

/

திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்து : மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயம்

திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்து : மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயம்

திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்து : மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயம்


ADDED : ஜூலை 15, 2011 12:58 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே திருமண கோஷ்டி சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியதில் மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்

பேட்டை அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் நாகலிங்கம்,28. இவருக்கும் கும்பகோணம் ஆறுமுகம் மகள் தேவி, 25 என்பவருக்கும் ஆதனூரில் நேற்று திருமணம் நடந்தது. நிகழ்ச்சி முடிந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் 60க்கும் மேற்பட்டோர் தனியார் வாடகை பஸ்சில் ஆதனூரில் இருந்து விருத்தாசலம் வழியாக கும்பகோணம் சென்று கொண்டிருந்தனர். டிரைவர் பாஸ்கர் பஸ்சை ஓட்டி சென்றார்.



கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் அருகேபஸ் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் ஆக்சில் உடைந்து அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது. பஸ்சில் பயணம் செய்த மணமகன் நாகலிங்கம், மணமகள் தேவி உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயடைந்த சின்னபொன்னு, பக்கிரி, சூர்யமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us