/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிறுத்தியிருந்த மினிலாரி தீ பிடித்து எரிந்து சேதம்
/
நிறுத்தியிருந்த மினிலாரி தீ பிடித்து எரிந்து சேதம்
நிறுத்தியிருந்த மினிலாரி தீ பிடித்து எரிந்து சேதம்
நிறுத்தியிருந்த மினிலாரி தீ பிடித்து எரிந்து சேதம்
ADDED : ஜூலை 11, 2011 11:08 PM
கடலூர் : கடலூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நடேசன் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மினி லாரியை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று காலை லாரியின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். லாரியின் கேபின் உள்புறமாக தீ எரிந்துகொண்டிருந்தால், தீயை அணைக்க முடியவில்லை. கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன் பகுதி எரிந்து சேதமடைந்தது. பேட்டரி ஒயரில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.