ADDED : ஜூலை 13, 2011 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் லயன்ஸ் சங்கம், மாட்சுயமா லயன்ஸ் சங்கம் (ஜப்பான்), மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசாதனை முகாம் நடந்தது.ஓரியண்டல் நர்சரி பள்ளியில் நடந்த முகாமிற்கு ரமேஷ்சந்த் கட்டோட் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் நாகப்பன் முகாமை துவக்கி வைத்தார். பொருளாளர் செல்வம், ஸ்ரீதர், திலீப், சிதம்பர ராஜா. பிரேம் குமார், பள்ளி செயலர் ராகவன், ஜெயின் பள்ளி தலைமை ஆசிரியர் ஆடியபாதம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முகாமில் 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச அறுவை சிகிச்சைக்காக அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் கண்ணாடி தேவையானவர்களுக்கு கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

