/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் 3 நாள் லீவு; மதுபாட்டில்கள் பதுக்கல் அதிகரிப்பு
/
டாஸ்மாக் 3 நாள் லீவு; மதுபாட்டில்கள் பதுக்கல் அதிகரிப்பு
டாஸ்மாக் 3 நாள் லீவு; மதுபாட்டில்கள் பதுக்கல் அதிகரிப்பு
டாஸ்மாக் 3 நாள் லீவு; மதுபாட்டில்கள் பதுக்கல் அதிகரிப்பு
ADDED : ஏப் 16, 2024 06:03 AM
தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை சமாளிக்கும் வகையில், மதுபாட்டில்கள் பதுக்கல் அதிகரித்துள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும் 17, 18 மற்றும் ஓட்டுப்பதிவு நாளான 19ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல், ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போதும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தான்.
தேர்தல் என்றாலே குவார்ட்டர், கோழி பிரியாணி என்ற மனநிலைக்கு தொண்டர்கள் மாற்றப்பட்டு விட்டனர். மேலும் வேட்பாளர்கள, கட்சித் தலைவர்களின் பிரசாரம், பொதுக் கூட்டங்களுக்கு தொண்டர்களை அதிகளவு வருகை தரச் செய்ய மதுவும், பிரியாணியும் தரப்படுகிறது.
இதற்காக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் தொழிற்சங்க பிரமுகர்கள் மூலம் பாக்ஸ் கணக்கில் மதுபானங்களை மொத்தமாக வாங்கப்படும். தற்போது மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் பாதிக்காத வகையில் மதுபானங்களை பதுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யவும் 10 முதல் 20 பாட்டில்கள் வீதம் சேகரித்து வைக்கின்றனர்.
- நமது நிருபர் -

