/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் லோக்சபா தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு; 11 தள்ளுபடி
/
கடலுார் லோக்சபா தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு; 11 தள்ளுபடி
கடலுார் லோக்சபா தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு; 11 தள்ளுபடி
கடலுார் லோக்சபா தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு; 11 தள்ளுபடி
ADDED : மார் 28, 2024 11:16 PM
கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 30 வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
லோக்சபா தேர்தல்-2024 ஓட்டுப் பதிவு வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதியுடன் முடிவடைந்தது.
தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., நாம் தமிழர் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று (28ம் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 19 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் காங்., வேட்பாளர் சிட்டிங் எம்.பி., விஷ்ணுபிரசாத், தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பகுஜன் சமாஜ் கட்சி தணிகைசெல்வன். பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பா.ம.க., வேட்பாளர் சினிமா இயக்குனர் நடிகர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி ஓய்வுப் பெற்ற ஆசிரியர் மணிவாசகம், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி விருத்தாசலம் அறிவுடைநம்பி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி கீழக்கொல்லை மாயக்கிருஷ்ணன், தேசிய மக்கள் சக்தி கட்சி குறவன்குப்பம் கீழ்பாதி முருகன்.
சுயேட்சை வேப்பாளர்கள் சென்னை திருமங்கலம் ஆனந்தி, கோண்டூர் ராசமோகன், சின்னக்கோட்டுமூளை ராஜசேகர், நடுவீரப்பட்டு சக்கரவர்த்தி, விருத்தாசலம் ஆயியார் மடம் சீனிவாசன், விழுப்புரம் பாணாம்பட்டு தட்சிணாமூர்த்தி, வண்டிப்பாளையம் தட்சிணாமூர்த்தி, நெய்வேலி டவுன்ஷிப் பாலாஜி, கொக்காம்பாளையம் பிச்சமுத்து, வைடிப்பாக்கம் பிரகாஷ், பண்ருட்டி ராமலிங்கம் ஆகிய 19 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

