ADDED : ஜூலை 18, 2026 09:51 PM
பரங்கிப்பேட்டை: முன் விரோத தகராறில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த குத்தாப்பாளையம், கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தரசன், 30; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளையராஜா குடும்பத்திற்கும் இட பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த, 16 ம் தேதி மீண்டும் இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டு, இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.இந்த மோதலில், முத்தரசன் மற்றும் அவரது உறவினர்கள் சிவசக்தி, கவியரசன் ஆகிய, 3 பேர் படுகாயமடைந்து, சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, முத்தரசன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, இளையராஜா, 37; ராகவன், 30; ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
சுக்குரான், சிந்தனைச்செல்வனை போலீசார் தேடிவருகின்றனர்.
