/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்ய திட்டம்: வேளாண் உதவி இயக்குனர் தகவல்

ADDED : செப் 02, 2024 01:00 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு மற்றும் புவனகிரி வட்டாரங்களில் பசுந்தாள் உர பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை சாகுபடி வயல்களை வேளாண் உதவி இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.
விவசாயிகளிடம் கலந்துரையாடிய உதவி இயக்குனர் கூறியதாவது; கடலுார் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நடப்பாண்டு சம்பா நெற்பயிர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான 960 மெட்ரிக் டன் மத்திய மற்றும் நீண்டகால நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்க திட்டமிட்டு, இதுவரை 420 மெட்ரிக் டன் விதைகள் கிராம திட்டம், வேளாண் திட்டம் மூலம் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மிக சன்ன ரக பயிர்களான பி.பி.டி., 5204 நெல் ரகம் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தேசிய விதைக்கழகம் மூலம் பெறப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்களில் இதுவரை 130 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு 82 மெட்ரிக் டன் சாகுபடிக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விரிவாக்க மையங்களில் 550 மெட்ரிக் டன் நீண்டகால நெல் ரக விதைகள் இருப்பில் உள்ளது. தனியார் விதை விற்பனை நிலையங்களில் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மண்வளத்தினை பெறுக்க விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்' என்றார். ஆய்வின்போது புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம் உடனிருந்தார்.