/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் 2ம் நாளாக போராட்டம்
/
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் 2ம் நாளாக போராட்டம்
ADDED : செப் 04, 2024 03:22 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பருவ கால தொழிலாளர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 110 பருவ கால தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த மாதம் 1ம் தேதியிலிருந்து பருவகால தொழிலாளர்களை இரு பிரிவுகளாக பிரித்து, சுழற்ச்சி முறையில் 15 நாட்கள் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் புணி வழங்க கோரி, நேற்று முன்தினம் காலை பருவ கால தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் ஆலை காப்பக அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் நேற்று காலை 2ம் நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையின் முதன்மை அதிகாரி பேசினார். அப்போது, ஆலை ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற கோரி, போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், ஆலையின் ஆட்சியர் (பொறுப்பு) ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒரு வாரகாலம், அவகாசத்தில் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறினார். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். அதில் ஒரு பிரிவினர் மட்டும் பணிக்கு திரும்பினர்.