ADDED : ஆக 10, 2024 05:59 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போலீசார் நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரம் ஏரி பகுதிக்கு சென்றபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பி.ஒய் 05 எம் 5074 என்ற எண்ணுள்ள மாருதி சுசுகி ஷிப்ட் டிசையர்,டி.என் 31 சி எச்4532 பைக் ஆகிய வாகனத்தை சுற்றிவளைத்து சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அங்கிருந்தவர்ளை பிடித்து விசாரித்ததில் அவர்கள் நடுவீரப்பட்டு சாய்குமார்,24;பிரபு,31;கடலுார் கே.என்.பேட்டை பாம்ராஜ் என்கிற ராஜேஷ்,45;கவியரசன்,20;வண்டிப்பாளையம் ரவிச்சந்திரன்,23;ஆகியோர் எனத் தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 5 பேரை கைது செய்து, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார்,பைக் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

