ADDED : மார் 27, 2024 07:17 AM

கடலுார் : கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட நேற்று 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.
கடலுார் லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. அதனால், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., பிரபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சியினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார்.
பின், அங்கு கலெக்டர் அருண் தம்புராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு டம்மி வேட்பாளராக விஷ்ணுபிரசாத் தந்தை கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்தார்.
சுயேட்சையாக விருத்தாசலம் ஆர்.சி., கொத்தாம்பாளையத்தை சேர்ந்த பிச்சைமுத்து, வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழில் கட்சி சார்பில் மாயகிருஷ்ணன், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று கூடுதலாக 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.

