/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பனை மரத்திலிருந்து விழுந்த சிறுவன் சாவு
/
பனை மரத்திலிருந்து விழுந்த சிறுவன் சாவு
ADDED : மே 10, 2024 01:22 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பனைமரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம், நடுத்தெருவை சேர்ந்தவர் அமுர்தலிங்கம். இவரது மகன் அருண்பாண்டியன்,17; வெள்ளக்கரை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
இவர் கடந்த 5ம் தேதி தமது வீட்டின் தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் பனங்காய் வெட்ட ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அருண்பாண்டியன் கழுத்து எலும்பு முறிந்து, புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அருண்பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.