/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு
ADDED : மே 26, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே குடி போதையில் தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த வெ.பெத்தாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தவேல், 24; பெருமாள், 45; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
நேற்று ஆனந்தவேல் வீட்டில் இருந்த போது, குடிபோதையில் வந்த பெருமாள், ஆனந்தவேலிடம் தகராறு செய்து கல்லால் தாக்கினார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், பெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.