/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஏப் 15, 2024 03:33 AM
புதுச்சத்திரம் : தனியார் கம்பெனி மேற்பார்வையாளரை தாக்கிய மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் வைரமுத்து, 27; இவர் பெரியகுமட்டியில் உள்ள ஓரியண்டல் தனியார் கம்பெனியில், விழுப்புரம் - நாகை சாலை விரிவாக்கப் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தில் சாலை விரிவாக்கும் பணி நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தது. பணியின் போது அதேபகுதியைச் சேர்ந்த ராஜேஷ், கோதண்டபாணி உள்ளிட்ட மூவர் இங்கு வேலை செய்யக்கூடாது எனக்கூறி, தடுத்து நிறுத்தி தகராறு செய்து, வைரமுத்துவை தாக்கினர்.
அவரது புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேஷ், கோதண்டபாணி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

