/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட எல்லையில் 'செக்போஸ்ட்' தேவை
/
மாவட்ட எல்லையில் 'செக்போஸ்ட்' தேவை
ADDED : மே 15, 2024 12:58 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக உள்ள திட்டக்குடி சப் டிவிஷனின், எல்லையோர கிராமங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் போலீஸ் செக் போஸ்ட் அமைக்க மாவட்ட எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திட்டக்குடி தொகுதியின் கடைக்கோடி பகுதியான கொரக்கவாடி, லட்சுமணாபுரம், பனையாந்துார் உள்ளிட்ட கிராமங்கள் பெரம்பலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கிராமங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மலைப்பகுதியிலிருந்து கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பது தொடர்கதையாக உள்ளது. அதேபோல் அருகிலுள்ள வெள்ளாற்றிலிருந்து மணல் திருடுவது, கிராவல் திருடுவது உள்ளிட்ட குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த கிராமங்கள் போலீஸ்நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து தொலைவில் உள்ளதால், குற்றங்களை கண்காணித்து தடுப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.
எனவே, லட்சுமணாபுரம் அல்லது அருகிலுள்ள எல்லைக்கிராமங்களில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

