ADDED : மார் 30, 2024 06:40 AM

கடலுார் : கடலுாரில் அ.தி.மு.க.,வினர் பயன்படுத்தும் பிரசார வாகனம் நடுரோட்டில் பழுதாகி நின்றது.
கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளரும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளரும், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இக்கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துவிட்டு, பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
இதற்காக, அந்தந்த கட்சிகள் பிரசார வாகனங்களை தயார்படுத்தி வருகின்றனர். தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, இன்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதற்காக, பிரம்மாண்டமாக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், அ.தி.மு.க.,வினர் பயன்படுத்தும் பிரசார வாகனம், பிரசாரத்திற்கு தயார்படுத்துவதற்காக அண்ணா பாலம் வழியாக மஞ்சக்குப்பம் நோக்கி வந்தது.
அப்போது, அண்ணா பாலத்தில் வந்தபோது திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதையடுத்து, மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, வாகனம் பழுதுநீக்கம் செய்யப்பட்டது.

